தற்போதைய செய்திகள்

25 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய தொகுப்பு – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்

அம்பத்தூர்

25000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்புகளை அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆவடி சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க கடந்த 60 நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு வார்டிலும்

ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவடி பருத்திப்பட்டு, காமராஜர் நகர், ஜேபி எஸ்டேட், காந்திநகர், பட்டாபிராம், திருநின்றவூர், தண்டுறை, மிட்டனமல்லி, திருமுல்லைவாயில், சேக்காடு, மோரை, சோளம்பேடு, அயனம்பாக்கம், திருவேற்காடு ஏரிக்கரை, அம்பேத்கர் நகர், வேலப்பன்சாவடி, சுந்தர சோழபுரம் நூம்பல், மாதிரி வேடு, போன்ற பகுதிகளில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுவரை 25000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அரிசி பருப்பு காய்கறி தொகுப்பு மளிகை பொருட்கள் தொகுப்பு ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி வருகிறார். அதனை பெற்றுக்கொண்ட மக்கள் கழக அரசுக்கும் அமைச்சருக்கும் நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர்

மேலும் ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஆவடி சட்டமன்ற தொகுதியில் அடங்கிய 13 காவல் நிலையத்திற்கு நேரில் சென்று அவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி நன்றி தெரிவித்தார். அதே போன்று ஆவடி தொகுதியில் உள்ள திருமுல்லைவாயில் சோழம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருமுல்லைவாயில் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ,ஆவடி அடுத்த மிட்டனமல்லி, பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை அதேபோன்று திருநின்றவூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற மருத்துவமனைகளில் நேற்று நேரடியாகச் சென்று அங்கு பணி புரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக அழைத்து சால்வை அணிவித்து பாராட்டி அவர்களுக்கு பரிசு கொடுத்து கை கூப்பி நன்றி தெரிவித்தார் அமைச்சர் பாண்டியராஜன்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் க.பாண்டியராஜன், இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறோம். அந்த வகையில் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் ஆவடி நகர கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்பகுதியை சார்ந்த 350 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினோம். மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய 27 சதவீத இட ஒதுக்கீட்டை மாணவர்கள் பெற அரசு நிச்சயம் குரல் கொடுக்கும். நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 100 சதவீத இட ஒதுக்கீட்டை நிச்சயம் பெறுவார்கள். அதற்குரிய பயிற்சிகளை அரசு வழங்கி வருவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் நகர செயலாளர்கள் ஆர்.சி.தீனதயாளன் திருநின்றவூர் எஸ்.தர்மலிங்கம், திருவேற்காடு நகர செயலாளர் சு.சத்தியநாராயனன், முன்னாள் நகர்மன்றத்தலைவர் கோலடி மகேந்திரன், திருமலை ராஜா, அருண்குமார், சம்பத், ஆர்.வேலு, கு.வே பரமசிவம், பி.காந்தி, சேகர், காந்தி, ஆர்.சி.டி.கமல், ஹேமந்த், டேவிட்ராஜன், புருஷோத்தமன், ஆவடி த.ரங்கன், இணையதுல்லா, ஓசி எப்.குமரவேல், முல்லை ஞானி, வட்டசெயலாளர்கள் கமலநாதன், ஆவடி சங்கர், பரத், மோகன், அரங்கைய்யா, வள்ளி சண்முகம், குப்பன், ஜெபசெல்வன், ஜெயபிரகாஷ், அப்பு, சாந்தி ஸ்டீபன், பாலரங்கன், முஸ்தபா, அர்ஜுன்சமத், கமல், அம்மா கண்ணன், தினேஷ், வீரவேசி, தென்றல் மகி, அம்மா தேவன், திலக், பிரபு, முரளி, வீரா, மனோகரன், வினித், ராஜா, சூர்யா, லோகநாதன், சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்