தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை நகராட்சியில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க வேண்டும் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் உத்தரவு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39-வது வார்டு பகுதிகளில் குடிநீர் வழங்கும் நீர்தேக்க தொட்டிகள் மற்றும் சுத்திகரிப்பு மையங்களை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுக்கு குடிநீர் தங்குதடையின்றி வழங்கவும் நீர் தேக்க தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து குளோரின் கலந்த குடிநீர் விநியோகிக்க நகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது கழகமாநில எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராமச்சந்திரன், நகர கழக செயலர் ஜெ.செல்வம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பீரங்கி ஜெ.வெங்கடேசன், மாணவரணி மாவட்ட செயலாளர் சத்ய சிவகுமார், மாவட்ட ஆவின் துணை தலைவர் பாரி பாபு, கலை பிரிவு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், அம்மா பேரவை இணைச் செயலாளர் மணிகண்டன், நகராட்சி பொறியாளர் அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.