சென்னை தற்போதைய செய்திகள்

நாதஸ்வர கலைஞர்கள், சலவைத்தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் – மாவட்ட கழக செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு வழங்கினார்

சென்னை

நாதஸ்வர இசைக் கலைஞர்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் கொளத்தூர் கே.கணேசன் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு அரிசி காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க வடசென்னை வடக்கு மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதியில் அடங்கிய அனைத்து வார்டுகளிலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் 500 நாதஸ்வர கலைஞர்களுக்கு அரிசி, காய்கறி ஆகிய நிவாரண பொருட்களும், கொளத்தூர் பூம்புகார் நகரில் சலவை தொழிலாளர்கள் 350 நபர்களுக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கொளத்தூர்
கே.கணேசன் தலைமையில் மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு வழங்கினார்.

அதனைப் பெற்றுக்கொண்ட இசைக்கலைஞர்கள், மற்றும் சலவைத்தொழிலாளர்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ புரசை வி.எஸ்.பாபு, வட்ட கழக செயலாளர்கள் பட்மேடு டி. சாரதி, பி.வேலு எம்.சந்திரசேகர் இரா.டில்லி, சி.சந்துரு, எம்.சந்திரசேகர், வெற்றிநகர் ந.ஜீவா, திருப்புகழ் எஸ்.அண்ணாமலை,
எம்.ராயப்பன், எ.டி.சாரய்யா, பி.மகேந்திரன், வி.லில்லிகல்பனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.