தற்போதைய செய்திகள்

2000 பேருக்கு அத்தியாவசிய பொருள் தொகுப்பு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் பகுதிகளில்,2000, நபர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தூய்மை பணியாளர்கள், ஏழை, எளிய மக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு 2000 பேர்களுக்கு அரிசி பருப்பு‌, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

பின்னர் செக்காரக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500 நபர்களுக்கும், வல்லநாடு பகுதியில்நடைபெற்ற நிகழ்ச்சியில் 250 நபர்களுக்கும், வசவப்பபுரம் பஞ்சாயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 300 நபர்களுக்கும், அனவரதநல்லூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 450 நபர்களுக்கும், நட்டார்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 200 நபர்களுக்கும், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 200, நபர்களுக்கும் என மொத்தம் 2000 நபர்களுக்கு 5 கிலோ அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை‌ செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.