கன்னியாகுமரி

அழிக்காலில் ரூ.9.35 கோடி செலவில் தூண்டில்வளைவு அமைக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு நன்றி என்.தளவாய்சுந்தரத்தை சந்தித்து பொதுமக்கள் தெரிவித்தனர்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அழிக்காலில் ரூ.9.35 கோடி செலவில், தூண்டில் வளைவு அமைக்க ஆணை பிறப்பித்துள்ளதற்கு, அப்பகுதி பங்குத்தந்தை உள்ளிட்ட பொதுமக்கள், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரத்தை நேரில் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, அழிக்கால் பகுதியில் அவ்வப்போது கடல் சீற்றங்கள் ஏற்பட்டு, கடல்நீர் அப்பகுதி மீனவ மக்கள் வீடுகளில் புகுவதால், அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இக்கிராமத்தைச்சார்ந்த பங்குத்தந்தை உள்ளிட்ட, மீனவ சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் இச்சிரமத்தை போக்குவதற்கு, தங்களது கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமென,தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரத்திடம் கோரிக்கை வைத்தார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம், அழிக்கால் பகுதி மீனவ மக்களின் கோரிக்கையினை, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் எடுத்துச் சென்றார். முதலமைச்சர், இக்கோரிக்கையின்மீது நடவடிக்கை எடுக்க, பொதுப்பணித்துறை (கடலரிப்பு தடுப்பு கோட்டம்) அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில், அழிக்கால் பகுதியில் பொதுப்பணித்துறை அலுவலர்கள், நேரில் ஆய்வு செய்து, திட்ட மதிப்பீடு தயார் செய்து, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன், ஆலோசித்து, மீனவ மக்களின் நலன் கருதி, இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கடலோர கிராமமான அழிக்காலில், ரூ.9.35 கோடி செலவில், தூண்டில் வளைவு அமைக்க ஆணையிட்டுள்ளார்.

அழிக்கால் பகுதியில் மீனவ மக்களின் நலன்கருதி, அப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று, தூண்டில் வளைவு அமைக்க ஆணையிட்ட, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரத்திற்கும், அழிக்கால் பங்குத்தந்தை சோரிஸ், உப பங்குத்தந்தை ரீகன், அழிக்கால் கூட்டுறவு சங்கத்தலைவர் ஹெலன் பேபி சந்திரா, கூட்டுறவு சங்க செயலர் ஜெஸ்டின், உபதலைவர் ஜான்சன், கணபதிபுரம் பேரூர் கழக செயலாளர் அண்ணாமலை, பங்கு பேரவை நிர்வாகிகள் அனைவரும், தோவாளை தமிழ்நாடு டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரத்தை அலுவலகத்தில் நேரில் சந்தித்து, அப்பகுதி பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்கள். இந்நிகழ்வில், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையப்பெருந்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியப்பெருந்தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், ஆகியோர் உடனிருந்தார்கள்.