தூத்துக்குடி

1000 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் – போ.சின்னப்பன் எம்.எல்.ஏ வழங்கினார்

தூத்துக்குடி

விளாத்திக்குளம் தொகுதியில் 1000 பேருக்கு அத்தியாவசிய பொருட்களை போ.சின்னப்பன் எம்.எல்.ஏ வழங்கினார்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட குறுக்குச்சாலை பஞ்சாயத்துக்குட்பட்ட கக்கரம் பட்டி, மீனாட்சிபுரம், ராமச்சந்திரபுரம் கிராமங்களில் உள்ள 1000 பேருக்கு அரிசி மற்றும் காய்கறிகளை சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஓட்டபிடாரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவருமான பி.மோகன், மாவட்ட ஒன்றிய கூட்டுறவு தலைவர் தனபதி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணை செயலாளர் போடு சாமி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் போ.சின்னப்பன் எம்.எல்.ஏ பேசுகையில், உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தமிழகத்தில் பரவவிடாமல் தடுத்து மக்களை காக்கும் கடவுளாக இருந்து புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, சுகாதாரத் துறை உட்பட பல்வேறு துறைகள் மூலம் எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாகத் தான் இந்த கொரோனா வைரஸ் நோய் தமிழகத்தில் அதிகம் பரவாமல்‌ தடுக்கப்பட்டு வருகிறது என்றார்.