தற்போதைய செய்திகள்

குளத்தில் மூழ்கி பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரணம் – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ வழங்கினார்

பொன்னேரி:-

குளத்தில் மூழ்கி பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரண உதவியை சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ வழங்கினார்.

பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாயலூர் ஊராட்சியில் உள்ள செங்கழனீர்மேடு கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் மனைவி மாலதி கடந்த 28ம்தேதி தனது மகன்களான குணாளன், சுஜித், ஆகியோருடன் குளத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது குணாளன், சுஜித், தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கினர். அப்பொழுது அருகில் துணி துவைத்துக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியான ஷீலா என்பவர் அவர்களை காப்பாற்ற முயன்ற போது அவரும் மூழ்கிப் பலியானார்.

இதனையடுத்து இரு குடும்பத்தினரையும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பொன்னேரி சிறுணியம் பி.பலராமன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ஷிலா குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய், மற்றும் குணாளன், சுஜித், குடும்பத்துக்கு தலா 25 ஆயிரம் வழங்கினார்.

இதேபோல் மேட்டுப்பாளையம் கிளைச் செயலாளர் தோம்பர, மற்றும் முன்னாள் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் எம்.பி.எஸ். மணி ஆகியோர் இரு தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். அந்த இரு குடும்பத்தினருக்கும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.25 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பானு பிரசாத், மாணவரணி செயலாளர் ராகேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் எஸ்.பி.அருள், நெய்தவாயல் கோபால், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் வாசு, அமிர்தலிங்கம், வழக்கறிஞர் பிரிவு இளையராஜா, மாரி, வாயலூர் துலுக்காணம், சிவகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.