சிறப்பு செய்திகள்

போடிநாயக்கனூர் தொகுதியில் 1,07,000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி – துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தேனி

தேனி மாவட்ட கழகம் சார்பில் போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட 1,07,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியை கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். மேலும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் வழங்கிய 2 குளிர்சாதன பெட்டிகளை போடி அரசு மருத்துவமனைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

அம்மா அவர்களின் தமிழக அரசு கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி அம்மா அவர்களின் அரசு குடும்ப அட்டை தாரர்களுக்கு கடந்த ஏப்ரல், மே மற்றும் இந்த ஜூன் மாதங்களுக்கான அரிசி முதல் குடிமைப்பொருட்கள் வரை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், ஊரடங்கின் காரணமாக ஆதரவற்றவர்களுக்கு வழங்கிடும் பொருட்டு, கழத்தின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்கள் வாயிலாக மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் 4,362 தூய்மைப்பணியாளர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வசிக்கின்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் ஊராட்சி ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், செயலாளர்கள், பேரூராட்சி பகுதிகளில் பேரூராட்சி கழக நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள் மற்றும் செயலாளர்கள் நகராட்சி பகுதிகளில் நகர் கழக நிர்வாகிகள், செயலாளர்கள், ஆகியோர் ஒருங்கிணைந்து நிவாரணப்பொருட்கள் வழங்கவுள்ளனர்.

இதில், அரிசி, உப்பு, கோதுமை மாவு, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, பாசி பருப்பு, புளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சாம்பார் தூள், கடுகு உளுந்து மற்றும் சீரகம் போன்ற பொருட்கள் உள்ளன. இதன் முதற்கட்டமாக போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,07,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியை கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் தனது சொந்த நிதியிலிருந்து போடி அரசு மருத்துவமனைக்கு 2 குளிர்சாதன பெட்டிகளை வழங்கினார். அவற்றை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனைக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார், மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட ஊராட்சித்தலைவர் பிரிதா, அன்பர் பணிக்குழு தலைவர் (கைலாசநாதர் திருக்கோயில்) வி.ப.ஜெயபிரதிப், மாவட்ட கழக அவைத்தலைவர் ஜி.பொன்னுப்பிள்ளை போடி நகர் கழகசெயலாளர் வி.பி.பழனிராஜ், போடி ஒன்றிய செயலாளர் சற்குணம் மற்றும் கழக நிர்வாகிககள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.