தற்போதைய செய்திகள்

ஜாதி, மத வேறுபாடு இல்லாத இயக்கம் கழகம் – அமைச்சர் க.பாண்டியராஜன் பேட்டி

அம்பத்தூர்

ஜாதி மத வேறுபாடு இல்லாத இயக்கம் கழகம் என்று அமைச்சர் க.பாண்டியராஜன் கூறி உள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க கடந்த 60 நாட்களுக்கும் ஆவடி சட்டமன்ற தொகுதியில் ஆவடி பருத்திப்பட்டு, காமராஜர் நகர், ஜேபி எஸ்டேட் , காந்திநகர், பட்டாபிராம், திருநின்றவூர்,தண்டுறை, மிட்டனமல்லி, திருமுல்லைவாயில், சேக்காடு ,மோரை ,சோளம்பேடு ,அயனம்பாக்கம் ,திருவேற்காடு ஏரிக்கரை, அம்பேத்கர் நகர், வேலப்பன்சாவடி, சுந்தர சோழபுரம் நூம்பல், மாதிரி வேடு, போன்ற பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு காய்கறி தொகுப்பு மளிகை சாமான்கள் தொகுப்பு ஆகியவற்றை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அதனை பெற்றுக்கொண்ட மக்கள், கழக அரசுக்கும் அமைச்சருக்கும் நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில்
ஆவடி தொகுதிக்குட்பட்ட சேக்காடு, திருமுல்லைவாயில், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட பொருட்களை அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர், பட்டியலின மக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதினால் பிற சாதி மக்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்ற தவறான சிந்தனையோடு திமுக பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருவகின்றனர். இந்த வியூகம் தமிழகத்தில் ஒரு போதும் நடக்காது. எந்தவிதமான ஜாதி மத வேறுபாடு இல்லாத கட்சி அதிமுக என்றார். அப்போது அவருடன் ஆவடி நகர கழக செயலாளர் ஆர்.சி. தீனதயாளன் உட்பட பலர் உடனிருந்தனர்.