தற்போதைய செய்திகள்

கோவில்பட்டியில் 1500 பேருக்கு நிவாரணம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1500 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.

கொரோனா தடுப்புக்கான நடவடிக்கையாக ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள தட்சண மாற நாடார் சங்கம் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ,ராஜூ 1500 ஏழை குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் தட்சண மாற நாடார் சங்க தலைவர் காளிதாசன், செயலாளர் சண்முகவேல், துணைச்செயலாளர் ரத்தினராஜ், தெற்கு கள்ளிகுளம் தட்சிண மாற நாடார் சங்க கல்லூரி ஆட்சிகுழு தலைவர் கணேசன், உறுப்பினர்கள் ராமர், பால்ராஜ் மற்றும் நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனி செல்வம், கோவில்பட்டி ஒன்றிய துணை சேர்மன் பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.