திருவண்ணாமலை

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.67 லட்சம் கடன் உதவி – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார்

திருவண்ணாமலை

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல் முடியனூர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 67 லட்சம் ரூபாய் மதிப்பில் கொரோனா சிறப்பு கடன் உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வழங்கினார்.

கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட மேல் முடியனூர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கொரோனா சிறப்பு கடன் உதவி திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 67 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவு சங்க தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 10 சுய உதவிக்குழுக்களுக்கு 67 லட்சம் மதிப்பீட்டில் வட்டியில்லாமல் திருப்பிச் செலுத்தும் கடன் உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து கடன் உதவிகளை பெற்று சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் புதுப்பாளையம் ஒன்றிய கழக செயலாளர் புருஷோத்தமன், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி,மாவட்ட கவுன்சிலர் தவமணி, ஒன்றிய குழு உறுப்பினர் வக்கீல் ரமேஷ், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் நாகேஷ், செயலாளர் வெங்கடேசன், சங்க இயக்குனர்கள் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கூட்டுறவு சங்கப்பிரதிநிதிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.