தற்போதைய செய்திகள்

ரூ.10 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் – அமைச்சர் பா.பென்ஜமின் வழங்கினார்

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பீடி தொழிலாளர்களுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண பொருட்களை அமைச்சர் பா.பென்ஜமின் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அ.ஜான்லூயிஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவரும் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழக செயலாளருமான திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும். காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருக்கழுக்குன்றம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருமான வி.வேலாயுதம் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ஊரக தொழிற்துறை அமைச்சர் பா.பென்ஜமின் கலந்து கொண்டு திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட 54 ஊராட்சியில் பணியாற்றும் துய்மை பணியாளர்கள் மற்றும் முஸ்லீம் மக்கள், பீடி தொழிலாளர்கள் என 1000 பேருக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

அப்போது அமைச்சர் பா.பென்ஜமின் பேசுகையில், கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் அவற்றை கட்டுபடுத்த நேரடியாக களத்தில் இருந்து பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக தூய்மை பணியாளர்கள் என்று பெயரை மாற்றியுள்ளார். கடுமையான கொரோனா தொற்று காலத்திலும் தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றும் துய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு தொடக்கத்திலிருந்தே சிறப்பாக செயல்பட்டு வருவதால் நோய்த்தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார். பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை தாக்கிய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.மரகதம் குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ. ம.தனபால், மாவட்ட கழக துணை செயலாளர்கள் எ.யஸ்வந்ராவ், மஞ்சுளா ரவிக்குமார், மாவட்ட அம்மாபேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம், திருக்கழுக்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் எ.விஜயரங்கன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன், மாவட்ட மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் பிரவின்குமார் மற்றும் நிர்வாகிகள் கலியபெருமாள், ஹரிதாஸ், ஜி.கே.பாபு, அருள்பிரகாஷ், சாமிநாதன், மோகன்ராஜ், சீனுவாசன், செல்வம், ஸ்டாலின், இராமச்சந்திரன், ரவி, சேகர், அரிகிருஷ்ணன், கோவிந்தசாமி, புல்லட் சுரேஷ், சங்கர், திருநாவுக்கரசு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாய்கிருஷ்ணன் மற்றும் உமா ஆகியோர் உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.