தற்போதைய செய்திகள்

திருப்போரூர் ஒன்றியத்தில் 300 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் – அமைச்சர் பா.பென்ஜமின் வழங்கினார்

திருப்போரூர்

திருப்போரூர் ஒன்றியத்தில் 300 பேருக்கு அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் பா.பென்ஜமின் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் புகைப்பட கலைஞர்கள், சலவை தொழிலாளி, இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் தொழிலாளர்கள் மற்றும் குடுகுடுப்பைக்காரர்கள் என 300 பேருக்கு 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை திருப்போரூர் ஒன்றிய கழக செயலாளர் தையூர் எஸ்.குமரவேல் ஏற்பாட்டில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் திருப்போரூர் பேரூராட்சி 5-வது வார்டு திமுக செயலாளர் பாஸ்கர் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் பா.பென்ஜமின் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார். பின்னர் புகைப்பட தொழிலாளர்கள் சங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.30 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் கொடுத்தனர். இதுதொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.