தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 200 பேர் விலகி மாவட்ட செயலாளர் முன்னிலையில் கழகத்தில் இணைப்பு

கிருஷ்ணகிரி

ஓசூரில் அ.ம.மு.க, வி.எச்.பி. அமைப்புகளிலிருந்து விலகிய ஜேபி என்கின்ற ஜெயப்பிரகாஷ் தலைமையில், சந்திரன் நாகராஜ் கிரன் பிரகாஷ், ஆகிய, 200க்கும் மேற்பட்டோர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

கிருஷ்ணகிரி மேற்கு, மாவட்டம் ஓசூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளிலிருந்து விலகிய 200க்கும் மேற்பட்டோர் விலகி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.புதியதாக கட்சியில் இணைந்த 200க்கும் மேற்பட்டோருக்கு முன்னாள் அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி சால்வை அணிவித்து பாராட்டினார். பின்னர் அனைவரும் கழக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஓசூர் முன்னாள் நகரமன்ற தலைவர் ராமு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சீனிவாசன், ஓசூர் மாநகர துணை செயலாளர் மதன், மாவட்ட பிரதிநிதி ஜெகதீஷ், நாராயணன், ஓசூர் ஒன்றிய குழு துணைத்தலைவர் நாராயணசாமி, மாவட்ட கவுன்சிலர் ரவிக்குமார், வெங்கடசாமி, ஓசூர் முன்னாள் நகரமன்ற தலைவர் நஞ்சுண்டசாமி தவமணி, அசோகர் ரெட்டி, ஸ்ரீதர், நாராயணரெட்டி, பாகலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் சீனிவாச ரெட்டி, சங்கர், முரளி கேசவன், சிவலிங்கம் 38-வது வார்டு வட்ட செயலாளர், சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.