கன்னியாகுமரி

கன்னியாகுமரி திருவேணி சங்கமத்தில் விளக்கு பூஜை – என்.தளவாய்சுந்தரம் பங்கேற்பு

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பொதுமக்கள் விடுதலை பெற வேண்டி, கன்னியாகுமரி திருவேணி சங்கமத்தில் நடைபெற்ற விளக்கு பூஜையில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் கலந்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பொதுமக்கள் விடுதலை பெற வேண்டி, கன்னியாகுமரி திருவேணி சங்கமத்தில் நடைபெற்ற விளக்கு பூஜையில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் 01.06.2020 அன்று கலந்து கொண்டு, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

கொரோனா நோய் உலகம் முழுவதும் மனிதர்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இத்தொற்றுநோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கு மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைளை தீவிரமாக எடுத்து வருகிறது. குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஒருங்கிணைந்து ஈடுபட்டு, தமிழக மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். இதன்மூலம் தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதன்மை நிலையை அடைந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு மக்களின் நலன் கருதி, முதலமைச்சர் உத்தரவின் பேரில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, கன்னியாகுமரி மாவட்ட கோவில் நிர்வாகம் வாயிலாக, இந்திய மக்களின் நலன் கருதி, இந்தியாவின் கடைகோடி எல்கையில் இருக்கக்கூடிய, குமரிமுனையில், முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் 16-கால் மண்டபத்தில், இன்றைய தினம் இயற்கை இறைவனை வேண்டி, உலகத்திலும், இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும், கொரோனாவே இருக்க கூடாது என்ற நிலைமையை ஏற்படுத்திட வேண்டும் என்று நாம் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில், இறைவனையும், குமரி அன்னையையும் வேண்டி, அனைத்து மதங்கள் சார்பாக, இன்று மாலை வேளையில் திருவிளக்கு பூஜை மூலமாக மகாபிரார்த்தனை செய்தோம்.

இந்த பிரார்த்தனையின் மூலம், நமது நாட்டிலுள்ள அனைவரும் செழிப்பாக, வளமாக, எந்தவொரு நோய் நொடிகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி, அதற்கான பூஜையும், அதற்கான வழிபாட்டையும், அதற்கான தீபாராதனையும் செய்யப்பட்டது. இந்த இறைவழிபாடு மூலமாக, நாடும், மாவட்டமும், மாநிலமும், மக்களும் நலமாக இருக்க வேண்டும் என்ற நல்நோக்கத்தோடு, இப்பூஜையை செய்துள்ளோம்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

இந்த பூஜையில், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சிவ.குற்றாலம், இணை இயக்குநர் (இந்து சமய அறநிலையத்துறை) எம்.அன்புமணி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் எஸ்.அழகேசன், கே.பாக்கியலெட்சுமி, எஸ்.சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.