தற்போதைய செய்திகள்

2480 குடும்பங்களுக்கு நிவாரணம் – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார்

திருநெல்வேலி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள 2480 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை ஆதிதிராவிடர் மற்றும் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள பகுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தலைமையில் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 96 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனடிப்படையில் முதற்கட்டமாக திருவேங்கடம் பேரூராட்சிக்குட்பட்ட திருவேங்கடம், கீழத்திருவேங்கடம், செல்லபட்டி, ஆவுடையாபுரம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த 2480 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி நிவாரண பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன் என்ற ராஜூ, ஒன்றிய செயலாளர்கள். வேல்முருகன், வாசுதேவன், சுப்பையா பாண்டியன், ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.