தற்போதைய செய்திகள்

2 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவி – அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

விழுப்புரம்

செஞ்சி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் 2 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விழுப்புரம் வடக்கு மாவட்டம், செஞ்சி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் அப்பம்பட்டு கிராமத்தில் சலவைத் தொழிலாளர், பழங்குடியினர், நரிக்குறவர்கள், ஊனமுற்றோர், தூய்மை பணியாளர் என 2000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் சோழன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி.ராமச்சந்திரன், வழக்கறிஞர் பிரிவு மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் கதிரவன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ராமச்சந்திரன், வல்லம் ஒன்றிய செயலாளர் வினாயகமூர்த்தி, மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலகிருஷ்ணன், செஞ்சி நகர செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு தூய்மை பணியாளர், ஊனமுற்றோர், பழங்குடியினர் உள்ளிட்ட 2000 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் நடராஜன், பொருளாளர் நாராயணன், மாணவரணி செயலாளர் லட்சுமி காந்தன், கழக நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், கண்ணியப்பன், ரங்கநாதன், கனகராஜ், சக்திவேல், கோகுல், கணபதி உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சோழன் செய்திருந்தார்.