தற்போதைய செய்திகள்

முதலமைச்சர் சேற்றில் கால் வைத்த முகராசியால் விளைச்சல் இருமடங்கு அதிகரித்துள்ளது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் விவசாயிகள் பெருமிதம்

மதுரை

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

இன்றைக்கு நமது முதலமைச்சர் விவசாயிகளின் தோழனாக திகழ்ந்து வருகிறார் உழவர் திருநாளான தைத்திருநாளில் அனைத்து இல்லங்களிலும் பொங்கல் பொங்கிட வேண்டும் என்ற அடிப்படையில் இரண்டு கோடிக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பினை வழங்கி அனைவருக்கும் சென்றவுடன் தான் தன் வீட்டிலே பொங்கல் கொண்டாடினார். அது மட்டுமல்லாது அன்றைய பொழுது விவசாயிகளின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் வயல்காட்டில் வேலை செய்தார் அப்பொழுது இந்த காட்சியை கண்ட பாரத பிரதமரே நமது முதலமைச்சர் பாராட்டினார்.

நமது முதலமைச்சர் திருவாரூர் பகுதியில் விவசாயிகள் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது அங்கு வயல்வெளியில் சேற்றில் கால் வைத்து நாத்து நட்ட நல்ல நேரம் இந்தாண்டு நமக்கு விளைச்சல் அதிகமான உள்ளது என்று விவசாயிகள் கூறி வருகின்றனர்.

நமது தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், 2019 -2020 ம் ஆண்டு கொள்முதல் பருவத்தில்        10.4.2020 வரை டெல்டா மாவட்டங்களில் 1508 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 15,78,934 மெட்ரிக் டன்னும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் 532 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 4,08,599 மெட்ரிக் டன்னும், கூட்டுறவு மற்றும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு இணையத்தின் மூலம் 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 1,03,578 மெட்ரிக் டன்னும், மொத்தம் 2061 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்20,91,112 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு 3,954 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது இதில் 3,55,343 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இது கடந்த 2018-2019 ஆண்டில் கொள்முதல் பருவத்தில் 10.4.2019 வரை 1776 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 16,56,940 மெட்ரிக் டன் அளவில் தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது .

இந்த ஆண்டில் தமிழகமெங்கும் அதிக விளைச்சல் காரணமாக முதலமைச்சர் ஆணைப்படி 2061 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 10.4.2020 வரை 21 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். இன்னும் சுமார் 7 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டு, நடப்பு கொள்முதல் பருவத்தில் மொத்தம் 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கொள்முதல் அளவானது தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொள்முதல் சாதனையாகும். நமது முதலமைச்சர் அளித்துள்ள சலுகைகளால் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கடந்த ஆண்டு 69,698 மெட்ரிக் டன்னாக இருந்த கிடங்கு சேமிப்பு இந்த ஆண்டு 90,739 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.

இந்த மூன்று மாத கோடைகாலத்திலும் விவசாயிகளுக்கு எந்த இழப்பும் ஏற்படக்கூடாது என்று விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், வேளாண் கருவிகள், மற்றும் உற்பத்தி செய்யும் பொருள்களை சந்தைக்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்து வந்ததால் என்று விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர் என்று கூறினார்

கிருஷ்ணன் என்ற விவசாயி கூறியதாவது:-

பொதுவாக எங்கள் கிராமத்தில் வழக்கமுண்டு நாங்கள் நடவு செய்யும் பொழுது முகராசி பார்ப்போம் ஏனென்றால் நாற்று நட்டவர் ராசியானவர் என்றால் எங்களுக்கு விளைச்சல் இரு மடங்கு கிடைக்கும். அதுபோல் தான் நெற்களஞ்சியமாக இருக்கும். திருவாரூரில் முதலமைச்சர் நாற்று நட்ட ராசியால் ஒட்டுமொத்த தமிழகத்தில் இன்றைக்கு விளைச்சல் இரு மடங்காக உள்ளது உண்மையில் நமது முதலமைச்சர் முகராசிக்காரர் தான். முதலமைச்சர் நாற்று நட்ட பொன்னான கையால் விளைச்சல் ஒட்டுமொத்த தமிழகத்தின் விளைச்சல் அமோகமாக கிடைத்துள்ளது குறிப்பாக இந்த தடை காலத்திலும் எங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளை செய்த முதலமைச்சர் எங்களின் காவலர் ஆவார் என்று கூறினார்

ராமரின் விவசாயி கூறியதாவது:-

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் அந்த காலத்தில் எல்லாம் விவசாய தொழிலை ஆரம்பிக்கும் போது ராசியான கரங்களில் ஆரம்பிக்க சொல்வோம் ஏனென்றால் அந்த ராசி ஒட்டுமொத்த வேளாண்மைக்கும் இரட்டிப்பாகும் அதுபோல் இன்றைக்கு நமது முதலமைச்சர் பொன்னான கையால் நாத்து நட அந்த ராசி எங்களுக்கு விளைச்சல் அமோகமாக கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்