மதுரை

மதுரை வடக்கு தொகுதியில் 2000 பேருக்கு நிவாரண உதவி எம் எல் எ வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார்

மதுரை

மதுரை வடக்கு தொகுதியில் 2,000 பேருக்கு நிவாரண உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார்.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி மதுரை வடக்கு தொகுதியில் உள்ள மீனாம்பாள்புரம், டிஆர்ஓ காலனி, செல்லூர் போன்ற பகுதியில் உள்ள 2,000 ஏழை எளிய மக்களுக்கு அரிசி காய்கறி போன்ற நிவாரண தொகுப்புகளை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் ஜெயவேல், வட்டக் கழக செயலாளர்கள் தங்க பாண்டி, ஓச்சாதேவர் ,,ஆறுமுகம் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

பின்னர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தெரிவித்ததாவது;-

இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் சிறந்த நிர்வாகத்தை முதலமைச்சர் நடத்தி வருகிறார் அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார். இந்த தடை காலத்திலும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் 100% முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார் எங்குமே ஒருவேளை மக்கள் பட்டினியாக இல்லை. தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கும் முழு உணவு பாதுகாப்பினை முதலமைச்சர் வழங்கியுள்ளார். ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் இந்த அம்மா அரசுக்கு கிடைத்து வரும் நற் பெயரை களங்கப்படுத்தும் வகையில் பல்வேறு பொய் பிரச்சார நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்.

ஆனால் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை ஏனென்றால் மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த தடை காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நிவாரண தொகுப்புகளை வழங்கி மக்களை கண் இமை போல் காத்து வருகிறார் என்று அதேபோல் விவசாயிகள், தொழிலாளர்கள் இப்படி அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருந்து அவர்களின் வாழ்வாதாரத்தை முதலமைச்சர் பாதுகாத்து உள்ளார்.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தெரிவித்தார்.