சிறப்பு செய்திகள்

அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் – பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சர் அன்பான வேண்டுகோள்

சென்னை

அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், உயிருக்குப் பின் தான் தொழில் என்று பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சர் அன்பான வேண்டுகோள் விடுத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் நேற்று சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், சில செய்தியாளர்கள் முககவசம் அணியாமல் இருந்ததை அறிந்த முதலமைச்சர் , அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும், உயிர் தான் முக்கியம் என்றும், உயிருக்குப் பின் தான் தொழில் என்பதை தெரிந்து நீங்கள் பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.