திருப்பூர்

பல்வேறு கட்சிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் விலகல் – பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

திருப்பூர்

மடத்துக்குளம் ஒன்றியத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் விலகி துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

திருப்பூர் புறநகர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியம் மைவாடி ஊராட்சி நரசிங்காபுரத்தில் கிளைச்செயலாளர் ரகுராம் ஏற்பாட்டில் தி.மு.க, நாம் தமிழர், அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 200க்கும் மேற்பட்டோர் விலகி திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

புதியதாக கட்சியில் இணைந்த 200க்கும் மேற்பட்டோருக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சால்வை அணிவித்து பாராட்டினார். பின்னர் அனைவரும் கழக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் கே.ஆறுச்சாமி, ஆர்.ஜி.ஜெகநாதன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.ராமகிருஷ்ணன், கழக பொதுக்குழு உறுப்பினர் எம்.கண்ணாயிரம், மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன், குரல்குட்டை கே.என்.பன்னீர்செல்வம், முருகவேல், சற்குணசாமி, கண்ணன், விஸ்வநாதன், அன்னதான பிரபு, பழனிச்சாமி, சிவக்குமார், சிவராஜ், பாலப்பம்பட்டி, சுப்பிரமணி, கணேஷ், சரவணன், பாலு, பாண்டியன், ரவி, உடுமலை சிதம்பரநாதன், வஞ்சியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.