திருப்பூர்

ரூ.2.25 கோடியில் சாலை, மழைநீர்வடிகால் பணிகள் – சு.குணசேகரன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

திருப்பூர்

திருப்பூர் தெற்கு தொகுதியில் ரூ.2.25 கோடி மதிப்பில் தார்சாலை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை சு.குணசேகரன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் மாநகராட்சி 34-வது வார்டில் உள்ள அண்ணா நகர் 1, 2-வது வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் ரூ.39.20 லட்சம் மதிப்பில் தார்சாலை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை சு.குணசேகரன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். இதேபோல் திருப்பூர் மாநகராட்சி 39-வது வார்டில் அமர்ஜோதி கார்டன் பிரதான சாலை, குறுக்கு வீதிகளில் ரூ.30.20 லட்சம் மதிப்பிலான தார்சாலை பணிகளையும், 56-வது வார்டில், பாளையக்காடு 2-வது வீதி, கே.டி.சி., மெயின் ரோடு, சிவசக்தி நகர், வெங்கடாச்சலபுரம் பகுதிகளில் ரூ.1.20 கோடி மதிப்பில் தார்சாலை பணிகளையும், 49-வது வார்டுக்குட்பட்ட புளியமரத்தோட்டம் ரூ.36 லட்சம் மதிப்பிலான தார்சாலை பணிகளையும் சு.குணசேகரன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். ஆக மொத்தம் ரூ.2.25 கோடி மதிப்பில் தார்சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் உதவி ஆணையர் சுப்பிரமணி, பொறியாளர்கள் கனகராஜ், சிவக்குமார் முன்னாள் மண்டல தலைவர் டெக்ஸ்வெல் முத்துசாமி, முன்னாள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, சிட்டி பழனிசாமி, வி.ஜி.வி.பாலு, சக்திவேல், வாட்டர் ஆறுமுகம், பொன்மருது, ஆட்டோ கோவிந்த், சலவை மணி, மருதையப்பன், பிரிண்டிங் நாகராஜ், நாகராஜ், மேலூர் மணி, வேலுச்சாமி, சுப்பிரமணி, வாசு, உள்பட பலர் பங்கேற்றனர்.