திருப்பத்தூர்

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் – திருப்பத்தூர் ஆட்சியர் வழங்கினார்

திருப்பத்தூர்

திருப்பத்தூர், கந்திலி வட்டாரங்களை சார்ந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருள் வழங்கினார்.

கூட்டுப்பண்ணையம் திட்டத்தில் கீழ் ஒரே பயிர் செய்யும் 100 விவசாயிகள் ஒரு குழுவாக இணைந்து வேளாண் பணிகளை செய்ய நவீன வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தி கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்தி குழு விவசாயிகள் பயனடைந்திடும் விதமாக தமிழக அரசு ரூ. 5.லட்சம் முழு மானியத்தில் பல்வேறு வேளாண் இயந்திரங்களை வழங்கி வருகிறது. இந்த இயந்திரங்களை விவசாய குழுக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பல்வேறு விவசாயிகளுக்கு வாடகைக்கு விட்டு குழுவின் வங்கி கணக்கில் செலுத்தி வரும் லாபத்தை கொண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

அதனடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டட அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக கந்திலி வட்டாரத்தை சார்ந்த 1 உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு 7 களை எடுக்கும் இயந்திரம் ரூ.5.82 லட்சம் மதிப்பீட்டிலும், திருப்பத்தூர் வட்டாரத்தை சார்ந்த 1 உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு 10 களை எடுக்கும் இயந்திரம் மற்றும் 10 சிறிய ஏர் கலப்பை இயந்திரம் ரூ.5.78 ஆயிரம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.11.60 லட்சம் மதிப்பீட்டில் குழுக்களுக்கு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருள் வழங்கினார். ஒவ்வொரு குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் அரசு முழு அரசு மானியம், மொத்தம் ரூ.10 லட்சம் அரசு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. எஞ்சியுள்ள தொகை ரூ. 1.60 லட்சம் உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகள் வழங்கியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், உதவி இயக்குநர்கள் தோட்டக்கலைத்துறை விநோதினி (கந்திலி) கயல்விழி (திருப்பத்தூர்) மற்றும் விவசாயிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.