தமிழகம்

தமிழகத்தில் ஒரேநாளில் 1,384 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை

தமிழகத்தில்  1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் நேற்று 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது. பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 447. இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 44 ஆயிரத்து 981.

பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 991. இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 20 ஆயிரத்து 286.44. அரசு பரிசோதனை மையங்கள் மற்றும் 30 தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 74 பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன.

585 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 14 ஆயிரத்து 901 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  12 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.  ஏற்பட்டுள்ள தொற்றுகளில் அதிகபட்சமாக சென்னையில் 1,072 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது மொத்தம் 12 ஆயிரத்து 132 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.