நாகப்பட்டினம்

நாகை எஸ்.பி. அலுவலகத்திற்குள் நுழைய புதிய கட்டுப்பாடு

நாகப்பட்டினம்

சென்னையில் காவலர்களுக்கு அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை தொடர்ந்து நாகை எஸ்.பி.அலுவலகத்துக்குள் நுழைய புதிய கட்டுப்பாடுகள்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் சென்னையில் உள்ள அதிகமான காவலர்களுக்கு கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் காவலர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புதிய கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. புகார் அளிக்க வரும் மனுதாரர்கள் காவலர்கள் என அனைவரையும் கண்காணிப்பு அலுவலகத்தின் வாயிலில் சோதனை செய்வதுடன் அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தர்மல் ஸ்கேன் பரிசோதனை, கிருமிநாசினிகள் கொண்டு கைகள் சுத்தம் செய்யப்பட்டு அறிகுறி இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அனுமதிக்கின்றன.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 50 சதவீத பணியாளர்களைக் கொண்டு சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ள நாகை எஸ்பி செல்வநாகரத்தினம், இந்த கட்டுப்பாடுகள் நிரந்தரமாக நீடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.