திருவள்ளூர்

15000 பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் நிவாரணம் – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ வழங்கினார்

திருவள்ளூர்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் 15 ஆயிரம் பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் நிவாரண தொகுப்பினை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் வழங்கினார்.

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நிவாரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய தொகுப்புகளை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் வழங்கி வருகிறார்.

அதன்படி சேம்பட்டு, காட்டாவூர் ,அரசூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 15,000 குடும்பங்களுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் ரூ.25 லட்சம் மதிப்பில் தலா 5 கிலோ அரிசி , காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராகேஷ், ஒன்றிய கழக செயலாளர் மோகன் வடிவேல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வாசு, வழக்கறிஞர் பிரிவு திருமலை, மாரி, இளையராஜா, பொன்னேரி துர்கா,பிரசாத், ஸ்ரீதர், சோம்பட்டு ஊராட்சி கழக செயலாளர் ராஜாராம், நாகராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.