மதுரை

மதுரை தெற்கு தொகுதியில் அம்மா மினி கிளினிக் – எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

மதுரை

மதுரை தெற்குத் தொகுதியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் திறந்து வைத்தார்.

மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட 50-வது வார்டில் முதலமைச்சரின் உன்னத திட்டமான முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் மாரிச்சாமி, மார்க்கெட் செல்லத்துரை, சீனிவாசன், நூர் முஹம்மது, ஜாகீர் நஜிமுதீன், மௌலான, சொக்கர், பாண்டி, நல்லசாமி, கார்த்திகை சாமி, செல்வகுமார், நந்தகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சீரிய சிந்தனையில் மக்கள் பயன்பெறும் வகையில் வீட்டு வாசலுக்கே மருத்துவம் என்ற நிலையை உருவாக்குகின்ற வகையில் அம்மா மினி கிளினிக்கை உருவாக்கியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்கை உருவாக்கி மாபெரும் சகாப்தம் படைத்துள்ளார். முதலமைச்சருக்கு, உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார். இதுபோன்ற திட்டங்களை வழங்கி வரும் முதலமைச்சரின் மீது மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் இதை திசைதிருப்ப பல்வேறு பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்தாலும் அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் மக்களுக்கு நலத்திட்டங்களை முதலமைச்சர் வழங்கி வருகிறார்.

அதனடிப்படையில் இந்த வார்டில் அம்மா மினி கிளினிக்கை திறந்து இருக்கின்றோம் இந்த கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என பணியாற்றுகின்றனர். இந்த கிளினிக்கில் அருகாமையில் உள்ள மக்கள் ரத்த பரிசோதனை, பெண்கள் கர்ப்பிணி பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும், மேலும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது என்றும் இதனால் மக்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படாது அவர்கள் வீட்டு வாசலிலே மருத்துவம் பார்க்கின்ற வகையிலே இந்த கிளினிக் செயல்படுகின்ற விதமாக அமைந்திருக்கிறது.

இவ்வாறு எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ. பேசினார்.