தற்போதைய செய்திகள்

தண்டையார்பேட்டை மண்டலத்தில் கழகத்தின் சார்பில் கிருமிநாசினி தெளிப்பு பணி – மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆய்வு

சென்னை

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியாக கழகத்தின் சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை வடசென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவையொட்டி தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ்,
தலைமையில் கழகத்தினர் கிருமிநாசினி தெளிப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேற்று ஆர்.கே.நகர் பகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் ராஜீவ்காந்தி நகர். வினோபா நகர், ராஜசேகர் நகர், டீச்சர்ஸ் காலனி, தொப்பை வினாயகர் கோவில் தெரு, எம்ஜிஆர். நகர், சத்தியா நகர், அண்ணா நகர், தேவி கருமாரி அம்மன் நகர்,
ஜெ.ஜெ.நகர், காசிமேடு பகுதியில் மீன்பிடி துறைமுகம், பல்லவன் நகர், திடீர் நகர், தண்டையார்பேட்டை எச்.எல்.எல்.சுனாமி குடியிருப்பு பகுதி, வ.உ.சி நகர், ஒத்தவாடை, திருவள்ளூர் நகர்,

கே.ஜி.கார்டன், சாமியார் தோட்டம், கிருஷ்டப்ப கிராமணி தோட்டம், திருநாவுக்கரசர் தோட்டம், புதுவண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டம், பூண்டித்தங்கம்மாள் தெரு, மீனவர் காலனி, உள்ளிட்ட பகுதிகளில் சோடியம் ஹைப்போ குளோரைடு மற்றும் லைசால் ஆகிய வேதியியல் கலந்த கிருமிநாசினி தெளிப்பு பணிகளை மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து கழகத்தினர் ஈடுபட்டு வருவதை வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதில் பகுதி செயலாளர் ஆர்.எஸ்.ஜெனார்த்தனம், மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், வட்ட செயலாளர்கள் ஏ.வினாயகமூர்த்தி ஆர்.நித்தியானந்தம், ஆர்.வி.அருண்பிரசாத், ஜெ.எம்.நரசிம்மன், நாகூர்மீரான், இ.வேலுமேஸ்திரி, புருஷோத்தமன், எல்.எஸ்.மகேஷ்குமார், டி.பிரபாகரன், கரிமேடு செல்வகுமார், டி.எம்.ஜி.பாபு, எம்.கண்ணியப்பன், கிருஷ்ணா, மோகன், மற்றும் மாவட்ட பகுதி, வட்ட, பிற அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.