தற்போதைய செய்திகள்

கோவில்பட்டியில் ரூ.17 லட்சத்தில் நீரேற்று நிலையங்கள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்

தூத்துக்குடி

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதி மக்களுக்கு ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் விநியோகிக்கும் நீரேற்று நிலையங்களை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மக்கள் சிரமத்தை போக்கிடும் வகையில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக கோவில்பட்டி மக்களின் 40 ஆண்டு கால குடிதண்ணீர் கனவை நிறைவேற்றும் வகையில் அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அனுமதியுடன் கோவில்பட்டி தொகுதி மக்களுக்கு இரண்டாவது குடி தண்ணீர் பைப் லைன் திட்டத்தை ரூ. 90 கோடி மதிப்பீட்டில் கொண்டு வந்து கோவில்பட்டி மக்களுக்கு நிரந்தரமாக குடி தண்ணீர் வழங்கி சாதனை படைத்துள்ளார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ.

இந்நிலையில் கோவில்பட்டி நகர மக்களுக்கு நிரந்தரமாக குடி தண்ணீர் வழங்கியது போல் தங்களுக்கும் நிரந்தரமாக குடி தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட கிராம மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மந்தித்தோப்பு கிராமம் இனாம் மணியாச்சி, பாண்டவர்மங்கலம், திட்டங்குளம், இலுப்பையூரணி உட்பட 5 கிராம மக்களின் குடிநீர் தேவையை நிரந்தரமாக பூர்த்தி செய்யும் வகையில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நீரேற்று நிலையத்தை திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் செந்தூர் பாண்டி, உதவி பொறியாளர் மெர்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு நீரேற்று நிலையங்களை திறந்து வைத்தார்ரூ17 லட்சம் மதிப்பீட்டில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு நிரந்தரமாக குடி தண்ணீர் வழங்கும் வசதியை துவக்கி வைத்த அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.