தற்போதைய செய்திகள்

3 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா காய்கறிகள் – முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வழங்கினார்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழகம் சார்பில் 3 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா காய்கறிகளை முன்னாள் அமைச்சர் பா.பாலகிருஷ்ண ரெட்டி வழங்கினார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி ஊரடங்கால் வருவாய் இல்லாமல் அவதிப்படும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகுப்புகளில் காய்கறிகளையும் சோ்த்து வழங்கப்படுவது சந்தை வாய்ப்பின்றி விளை பொருள்களை விற்கமுடியாமல் திணறும் விவசாயிகளுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது

போதிய விற்பனை இல்லாததால் விளை பொருள்களை அறுவடை செய்யாமல் தோட்டங்களில் விட்டுவிடும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். சந்தை வாய்ப்பின்றி விளை பொருள்களுக்கான ஆதரவு விலைகூட கிடைக்காத சூழலில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களில் காய்கறிகளையும் சோ்த்துள்ளது விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒசூரில் ஆண்டு முழுவதும் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிஃபிளவா், கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்குகளை பயிரிட்டு வருகின்றனா். விளை பொருள்கள் ஒசூா் உழவா் சந்தை, பத்தளப்பள்ளி மொத்த விற்பனை அங்காடி போன்ற இடங்களுக்கும், தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம், ஆந்திரத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமான லாரிகளில் காய்கறிகள் கொண்டு செல்லப்படும். இந்த நிலையில், காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டாலும் ஊரடங்கு காரணமாக விற்பனைக்கு கொண்டு செல்ல முடிவதில்லை.

இதையடுத்து விவசாயிகளின் நிலையை உணா்ந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி விவசாயிகளிடமிருந்து நாள்தோறும் 50 முதல் 70 டன் வரை பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் நேரடியாக கொள்முதல் செய்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஓசூர் மாநகராட்சி, தளி, பர்கூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பேரிகை பாகலூர் உள்பட நகர, கிராமப்புறங்கள் மட்டுமல்லாமல் மலைவாழ் கிராமங்களில் உள்ள சுமார் மூன்று லட்சம் குடும்பங்களுக்கு சுழற்சி முறையில் காய்கறிகளை நாள் தோறும் வழங்கி வருகிறார். தற்போது வரை சுமார் 2000 டன் அளவிற்கு காய்கறிகளை வாங்கி பொதுமக்களுக்கு விநியோகம் செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட தளி, ஒசூர், பர்கூர் ஆகிய சட்டமன்ற தொகுதி பகுதிகளில் காய்கறிகளை தொடர்ந்து வழங்கி வரும் கழகத்தினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுவதுடன் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.

கழகம் சார்பில் வழங்கப்படும் காய்கறிகளின் தொகுப்பை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன், ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, துணைத் தலைவர் நாராயணசாமி, மாவட்ட கவுன்சிலர் ரவிக்குமார், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை டைரக்டர் செந்தில், மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன். முன்னாள் நகரமன்ற தலைவர் ராமு. மாவட்ட பிரதிநிதி சிட்டி ஜெகதீஷ், கிருஷ்ணகிரி ஒன்றிய கூட்டுறவு சங்க தலைவர் மாதையன் பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் நகர துணை செயலாளர் மதன் தவமணி அசோகா ரெட்டி வாசுதேவன் ஸ்ரீதர் நாராயண ரெட்டி பிரபாகர் ரெட்டி தனியார்பஸ் ஓட்டுனர் சங்க தலைவர் சென்ன கிருஷ்ணன் தளி ஒன்றிய கழக செயலாளர் கணேசன் கெலமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன் ஜெயபால் பாகலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் சீனிவாச ரெட்டி ஆகியோர் ஒருங்கிணைத்து வருகின்றனர்