தற்போதைய செய்திகள்

அமமுக.வில் இருந்து ஊராட்சி தலைவர் விலகல் – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்

மதுரை

அமமுக ஊராட்சி மன்றத்தலைவர் அக்கட்சியில் இருந்து விலகி மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ முன்னிலையில் கழகத்தில் இணைத்து கொண்டார்

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள இரணியம் அ.ம.மு.க ஊராட்சி தலைவர் கருப்பையா தனது ஆதரவாளர்களுடன் அ.ம.மு.க.விலிருந்து விலகி மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் வாசு என்ற பெரியண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், இரணியம் ராம்குமார், ராமச்சந்திரன், கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசியதாவது:-

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று புரட்சித்தலைவி அம்மா மக்களுக்காக வாழ்ந்தார், அதன் வழியில் முதலமைச்சர் அம்மாவின் வழியில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.

இன்றைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எல்லாம் இந்த அரசுக்கு எதிராக பல்வேறு பொய் பிரச்சாரத்தை பரப்பினர்கள். அது எல்லாம் இன்றைக்கு தவிடுபொடி ஆக்கி மக்களின் நன் மதிப்பை பெற்ற அரசாக இன்றைக்கு முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.மேலும் இந்த மூன்று மாத காலத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்ததால் தமிழகத்தில் இந்த தொற்று நோய்த்தாக்கம் குறைந்துள்ளது. விரைவில் தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக நமது முதலமைச்சர் உருவாக்கி காட்டுவார். தற்பொழுது நீங்கள் மீண்டும் தாய் கழகத்தில் இணைந்துள்ளீர்கள் நீங்கள் சிறப்பாக கழக வெற்றிக்கு பணியாற்றுங்கள். உங்களுக்குரிய அங்கீகாரத்தை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரும் வழங்குவார்கள்.

இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்.