தற்போதைய செய்திகள்

அம்பத்தூரில் 3000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ வழங்கினார்

அம்பத்தூர்

அம்பத்தூரில் 3000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ வழங்கினார்.

கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் தினந்தோறும் ஒவ்வொரு வார்டாக சென்று ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய 85-வது வார்டு காமராஜபுரம், மங்களபுரம், அம்பேத்கர் திடல், ஓவி அழகேசன் நகர் போன்ற பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கும், 86-வது வார்டு மண்ணூர்பேட்டையில் 1000 ஏழை மக்களுக்கும், ஐபிஎப் காலனியில் உள்ளவர்களுக்கும், 89-வது வார்டு குமரன் நகர், டி.எஸ்.கிருஷ்ணா நகர், 85-வது வார்டு ஐசிஎப் காலனி, 84-வது வார்டு பட்டரவாக்கம் செல்லியம்மன் கோவில்,

81 மற்றும் 80 வது வார்டு ஆகிய பகுதியில் ஏழை எளிய மக்களுக்கும், 85 வது வார்டில் சுமைதூக்கும் மற்றும் பாரம் இறக்கும் தொழிலாளர்கள் 300 நபர்களுக்கும், அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு ஓவியக் கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் 300 நபர்களுக்கும், முடிதிருத்தும் தொழிலாளர்கள் 300 நபர்களுக்கும், சலவைத் தொழிலாளிகள் 300 நபர்கள், 89-வது வார்டு குமரன் நகரில் ஏழை மக்கள் 1000 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் 200 நபர்களுக்கு என நேற்று மட்டும் ஒரே நாளில் 3000 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி தொகுப்பு ஆகிய நிவாரண பொருட்களை மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் என்.அய்யனார், அவைத்தலைவர் எஸ்.கிருஷ்ணன், துணை செயலாளர் முகப்பேர் பாலன், பகுதி பொருளாளர் கோதண்டம் மாவட்ட மாணவரணி செயலாளர் எம்.டி,மைக்கேல்ராஜ், மாவட்ட பிரதிநிதி கே.பி.முகுந்தன், டன்லப்வேலன், எல்.ஜி.பிரகாஷ், ஹரிகிருஷ்ணன், கே.பாலசுந்தரம், வட்ட செயலாளர், சிவிமணி, ஜான், மோகன், நிலாராமன், விஸ்வநாதன், எல்.என்.சரவணன், மீனா பாண்டியன் ராஜா சிவபாலன், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட ஏழை மக்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஆகியோர் கழக அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், சட்டமன்ற உறுப்பினர் வி.அலெக்சாண்டருக்கும் மனதார நன்றியை தெரிவித்து கொண்டனர்.