தற்போதைய செய்திகள்

ஆரணி பகுதியி ரூ.86 லட்சத்தில் சாலை பணிகள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த இபி நகர் பகுதியில் ரூ.6.28 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை, பேவர் பிளாக் சாலை அமைக்கப்பதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த இபி-நகர் பகுதி உருவாகி சுமார் 40 ஆண்டுகள் ஆகிறது இதுவரை இப்பகுதியை சேர்ந்த மக்கள் மண்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். 4120மீட்டர் நீளம் மண்சாலையாக இருக்கும் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் உத்தரவின் பேரில் அப்பகுதியை ஆய்வு செய்து 86.28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று பணிகள் துவங்கப்பட்டது. மேற்கண்ட பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.இதில் 1339 மீட்டர் நீள மண் சாலையில் ரூ.53.86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலையும், 895 மீட்டர் நீள மண்சாலையில் ரூ.32.42 லட்சம் மதிப்பில் சிமென்ட்சாலை அமைக்கும் பணியும் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியின்போது அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இபி நகர் பகுதி மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறும் வகையில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. அதற்கான பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது மேலும் மீதமுள்ள 1886 மீட்டர் நீளத்திற்கு மண்சாலையாக உள்ள பகுதியில் சாலைகள் அமைக்க ரூ.85 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இபி நகர் பகுதி முழுவதும் 5500 மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் கால்வாய் அமைக்க ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் பணிகள் செய்ய “திரவக் கழிவு மேலாண்மை திட்டத்தின்” கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது விரைவில் மேற்கண்ட பணிகளும் நடைபெறவுள்ளது என்று கூறினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பிஆர்ஜி.சேகர், மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் அ.கோவிந்தராசன், முன்னாள் நகரமன்ற தலைவர் வி.பி.இராதாகிருஷ்ணன், நகர செயலாளர் எ.அசோக்குமார், மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் எம்.வேலு, மாவட்ட கவுன்சிலர் ப.திருமால், திலகவதி கன்ஷ்ட்ரக்சன்ஸ் உரிமையாளர் ஜி.மோகன்,சேவூர் முன்னாள் தலைவர் வெங்கடேசன், தொழிற்சங்க நிர்வாகி உதயசங்கர், சேவூர் பாலசந்தர், பீமன் என்கிற ரவி, இபி நகர் குமார், ஒன்றிய பொறியாளர்கள் மதுசூதனன், குருபிரசாந்த், பணி மேற்பார்வையாளர் சுஜாதா உள்ளிட்டோர் இருந்தனர்.