தற்போதைய செய்திகள்

வில்லிவாக்கம் அம்மா உணவகத்திற்கு கிருமிநாசினி இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி – மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு பங்கேற்பு

சென்னை

வில்லிவாக்கம் அம்மா உணவகத்தில் கிருமிநாசினியுடன் கூடிய கை கழுவும் இயந்திரத்தை கழக அமைப்பு செயலாளர் ஜேசிடி பிரபாகர் தன் சொந்த செலவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார். இதில் மாவட்ட கழக செயலாளர் டி.ஜி. வெங்கடேஷ்பாபு பங்கேற்று இயந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்தார்.

சென்னை வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் கிருமிநாசினியுடன் கூடிய கை கழுவும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய இயந்திரத்தை கழகம் சார்பாக அமைப்பு செயலாளர் ஜேசிடி பிரபாகர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கினார். அம்மா உணகவங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அம்மா உணவகத்திற்கு உணவு உண்ண வருபவர்கள் பயன் பெறும் வகையில் ரூ. 18 ஆயிரம் மதிப்புள்ள நவீன கிருமி நாசினியுடன் கூடிய கை கழுவும் இயந்திரத்தை வைத்துள்ளனர். அதேபோல வில்லிவாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இலவச முகக்கவசங்கள் நடமாடும் ஊர்தி மூலம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் டிஜி.வெங்கடேஷ்பாபு கிருமிநாசினி இயந்திரத்தை இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கொளத்தூர் கணேசன், ஜி.ஆர்.பி.கோகுல், வில்லிவாக்கம் ஆர்.மகேஷ், எ.வெங்கடேசன், வில்லிவாக்கம் ஜி.வேணு, சிக்மா எஸ்.சத்தியநாராயணன், சிட்கோ ராம்மூர்த்தி, ரெட்டில்ஸ் ரோடு நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.