தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முதலமைச்சர் திகழ்கிறார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

மதுரை

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முதலமைச்சர் திகழ்கிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமித்தோடு கூறினார்.

திருமங்கலம் தொகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி, மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது;-

தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்க்க தனி கவனம் செலுத்தும் வகையில் முதலமைச்சர் தொழில் முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று வருகிறார். சமீபத்தில் கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் 27 சதவீதம் வழங்கி வரும் 5 மாநிலங்களின் பங்கு மகத்தானது என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த 5 மாநிலங்களில் நமது தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் முதன்மையாக உள்ளது. ஏனென்றால் முதலமைச்சர் தமிழகத்தை பொருளாதார வளர்ச்சியில் எடுத்துச் செல்லும் மகத்தான பணியில் இன்றைக்கு ஒரு முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளார்.

தமிழகத்தை பொருளாதார வளர்ச்சிக்கு எடுத்து சொல்ல போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு தொழில் முதலீட்டாளர்களுக்கு அரணாக இருந்து, முழு ஒத்துழைப்பு தந்து, பல்வேறு சலுகை தந்து முதலீட்டாளர்களை, எந்த நேரத்திலும் நினைத்தவுடன் சந்திப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று எளிமையான அணுகுமுறை, தேவையான அறிவுரை, உரிய வழிகாட்டல் கொடுப்பதோடு மட்டுமல்லாது, தமிழக தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தொடர்ந்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக திகழச் செய்யும் வகையில், இன்று இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஒளிரும் தமிழகம் என்று புதிய வழிகாட்டுதலை உருவாக்கி காணொலி காட்சி மூலம் உரையாடினார். இந்த காணொலி காட்சியில் 500 க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலை உருவாக்கி அதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி இளைய சமுதாயத்திற்கு புதிய விடியலாக முதலமைச்சர் திகழ்கிறார்.
தொலைநோக்கு சிந்தனையோடு, நம்பிக்கை வடிவமாக ஒட்டுமொத்த இதயத்தில் இடம்பிடித்த நமது முதலமைச்சர், எடுத்து வருகின்ற முன்னோடியான தொலைநோக்கு திட்டங்கள் எல்லாம் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக அமைந்தது நாம் செய்த பாக்கியம் ஆகும்.

முதலமைச்சர் அயராது உழைத்து, தொலைநோக்கு பார்வையால், மதிநுட்பத்தால் கூடிய ஆற்றலால், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தீர்க்க தரிசியாக நமது முதலமைச்சர் திகழ்கிறார். மேலும் தொழில் முதலீட்டாளர்களுக்கு தானே கடிதம் எழுதி புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வழிகாட்டுதலை, சிறு குழப்பம் இல்லாமல், செயல்பாட்டிற்கான வழிகாட்டு நெறிகளை தெளிவாக கூறியுள்ளார் என்று முதலீட்டாளர்கள் முதலமைச்சரை பாராட்டி வருகின்றனர். முதலீட்டாளர்களுக்கு தேவையான ஊக்கம், உதவிகளை நினைத்த மாத்திரத்தில் அளிக்கக்கூடிய வகையில் எளிமையான ஆற்றல், சிறந்த நிர்வாக தலைமையாக பெற்றிருக்கின்ற நமது முதலமைச்சர் தொழில்துறையில் ஒரு புதிய சகாப்தம் படைப்பார்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.