தற்போதைய செய்திகள்

கொரோனா போரில் விரைவில் தமிழகம் வெல்லும் – அமைச்சர் க.பாண்டியராஜன் நம்பிக்கை

அம்பத்தூர்

கொரோனா போரில் விரைவில் தமிழகம் வெல்லும் எனஆவடியில் நடைபெற்ற நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆவடி சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க கடந்த 65 நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு வார்டிலும்
சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவடி பருத்திப்பட்டு, காமராஜர் நகர், ஜேபி எஸ்டேட், காந்திநகர், பட்டாபிராம், திருநின்றவூர்,தண்டுறை, மிட்டனமல்லி, திருமுல்லைவாயில்,

சேக்காடு, மோரை, சோளம்பேடு, அயனம்பாக்கம், திருவேற்காடு ஏரிக்கரை, அம்பேத்கர் நகர், வேலப்பன்சாவடி, சுந்தர சோழபுரம் நூம்பல், மாதிரி வேடு, போன்ற பகுதிகளில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அரிசி, பருப்பு, காய்கறி, மளிகை சாமான்கள் தொகுப்பு ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி வருகிறார். அதனை பெற்றுக்கொண்ட மக்கள் கழக அரசுக்கும் அமைச்சருக்கும் நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில்

அடுத்த ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவடி செக்போஸ்ட் மிட்டனமல்லி பிருந்தாவன் நகர் 3-வது வார்டில் 300 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஆவடி நகர சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் அப்பு என்கிற அந்தோணிராஜ் வட்ட பொருளாளர் ராமச்சந்திரன் ஏற்பாட்டில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் அரிசி பருப்பு காய்கறி ஆகிய தொகுப்புகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது,

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க ஆவடி சட்டமன்ற தொகுதி முழுவதும் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன ஆவடி சட்டமன்ற தொகுதியில் அடங்கிய ஒவ்வொரு பகுதிக்கும் கிருமிநாசினிகள் பிளீச்சிங் பவுடர் ஆகியவை தெளிக்கப்பட்டு இன்று கொரோனா வைரஸ் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனவைரஸ் பாதிக்கப்படும் நபர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் சுமார் 40000 வென்டிலேட்டர் கைவசம் இருக்கின்றன ஆனால் அதன் முழு விவரம் தெரியாமல் மு.க.ஸ்டாலின் ஏதோ அரசின் மீது வீண் பழி சுமத்த வேண்டும் என்று பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் எதிர்க்கட்சி உறுப்பினராய் இருந்தாலும்கூட சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் விரைவில் நான் வணங்கும் பச்சையம்மன் அருளோடு குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் கொரோனா என்னும் போரில் விரைவில் தமிழகம் வெல்லும்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

நிகழ்ச்சியில் ஆவடி நகர கழக செயலாளர் ஆர்.சி.தீனதயாளன், இணையதுல்லாா, ஜெராக்ஸ் ரமேஷ், ஆர் சி டி கமல் ,ஆர் சி டி ஹேமந்த், சங்கர் கமலநாதன், குப்பன், வள்ளி சண்முகம், பாலரங்கன், ஜெயபிரகாஷ், திலக் வரதன், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.