பெரம்பலூர்

15 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கர ஸ்கூட்டர் – சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் வழங்கினார்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் வழங்கினார்.

முதலமைச்சரின் உத்தரவின் படி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம மாற்றுத்திறனாளி நபர்களுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 2019- 2020-ம் நிதி ஆண்டில் 15 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தலா ரூ.56.400 வீதம் ரூ.8,46,000 மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்களை பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் வழங்கினார்.

இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்களை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தமிழக அரசுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சக்திவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் காமாட்சி, வருவாய் வட்டாட்சியர் பாரதிவளவன், முடநீக்கியல் வல்லுனர் ஜெயராமன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.