திருவள்ளூர்

அம்பத்தூரில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு நிவாரணம் -அலெக்சாண்டர் எம்.எல்.ஏ வழங்கினார்

அம்பத்தூர்:-

அம்பத்தூரில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு நிவாரண பொருட்களை மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ வழங்கினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் அம்பத்தூர் தொகுதியில் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் அம்பத்தூர் தொகுதியில் ஊரடங்கு சமயத்தில் சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் உடன் இணைந்து அவர்களுக்கு உறுதுணையாக பணியாற்றி வரும் ஊர்க்காவல் படையை சேர்ந்த காவலர்கள், மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த காவலர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி, துவரம் பருப்பு, மளிகை பொருட்கள் தொகுப்பு, காய்கறி ஆகிய நிவாரணப் பொருட்களை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் வழங்கினார்.

இதேபோல் அம்பத்தூர் பகுதி 85-வார்டு சின்ன காலனியில் 700, ஏழை மக்களுக்கும் பெரிய காலனியில் 750 ஏழை மக்களுக்கும் நிவாரணப் பொருட்களை மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ வழங்கினார். நிவாரண உதவிகளை பெற்றுக் கொண்ட ஊர்க்காவல் படை காவலர்கள், போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த காவலர்கள் மற்றும் ஏழை மக்கள் அம்மா வழியில் வரும் கழக அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ.வுக்கும் மனதார நன்றியை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் என்.அய்யனார், அவைத்தலைவர் எஸ்.கிருஷ்ணன், துணை செயலாளர் முகப்பேர் பாலன், பகுதி பொருளாளர் கோதண்டம் மாவட்ட மாணவரணி செயலாளர் எம்.டி.மைக்கேல்ராஜ், மாவட்ட பிரதிநிதி கே.பி.முகுந்தன், டன்லப்வேலன், கே.பாலசுந்தரம், வட்ட செயலாளர் சிவிமணி, ஜான் சுந்தர பாபு, எல்.ஜி.பிரகாஷ், விஜயகாந்தன், லட்சுமணன், எல்.என்.சரவணன், மீனா பாண்டியன், ராஜா சிவபாலன், கள்ளிகுப்பம் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.