மதுரை

முதலமைச்சரின் மகத்தான நடவடிக்கைகள் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது – வி.வி.ராஜன் செல்லப்பா பெருமிதம்

மதுரை

முதலமைச்சரின் மகத்தான நடவடிக்கைகள் எல்லாம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது என்று மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றத்தில் உள்ள 2,000 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட சமையல் தொகுப்புகளை மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், பகுதி கழக செயலாளர் பகுதி இலக்கிய அணி செயலாளர் மோகன் தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசியதாவது;-

உலகில் 210 நாடுகளில் இந்தக் கொரோனா நோயால் மக்கள் பாதிப்படைத்து, லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர்.இந்த நோயின் தாக்கத்தை முன்கூட்டியே உணர்ந்த நமது முதலமைச்சர், ஜனவரி மாதம் முதல் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால், தமிழகத்தில் நோய் தாக்கம் குறைவாக உள்ளது.மட்டுமல்லாது, இந்தியாவிலேயே இந்த நோயின் தாக்கம் ஏற்பட்டு அதிகமான குணமடைந்த பட்டியலில் நமது தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

கடந்த 90 நாட்களுக்கும் மேலாக, இந்த ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் கிடைக்கச் செய்தது மட்டுமல்லாது, 3280 கோடி மதிப்பில், மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார் இந்தியாவில் இதுபோன்று எந்த மாநிலத்திலும் வழங்கியது கிடையாது.

கழகத்தின் சார்பிலும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க இதுவரை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் 90,000 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றைக்கு ஸ்டாலின் மக்களை திசை திருப்பும் வண்ணம் ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் வீட்டிலிருந்தபடியே நாடகத்தை அரங்கேற்றினார். ஆனால் அவரால் செய்ய முடியவில்லை ஏனென்றால் அவர் மக்களுக்காக செய்யவில்லை.

இந்த அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும். அதேபோல் தன்னை அரசியலில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாம் காணாமல் போய்விடுவோம் என்ற காரணத்தினால் செய்தார். ஸ்டாலினின் எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இன்றைக்கு எட்டரை கோடி மக்களின் நன்மதிப்பை பெற்ற முதலமைச்சராக முதலமைச்சர் திகழ்கிறார். அதுமட்டுமல்லாது முதலமைச்சர் எடுத்து வரும் சீரிய நடவடிக்கையால் நோயின் பரவல் தமிழகத்தில் குறைந்து வருகிறது. 5ம் கட்ட ஊரடங்கு வரையிலும் அம்மா உணவகங்களில் இலவச உணவு பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் ஏழு லட்சம் மக்கள் பயன் பெறுகின்றனர்.

இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்.