தற்போதைய செய்திகள்

திருப்பரங்குன்றம் நிலையூரில் 5,000 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்புகள் – மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா வழங்கினார்

மதுரை:-

திருப்பரங்குன்றம் நிலையூரில் 5,000 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்புகளை மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா வழங்கினார்.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் உள்ள நிலையூரில் 5,000 குடும்பத்திற்கு அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன் தலைமையில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசியதாவது:- 

இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களுக்கும் வழிகாட்டும் தலைவராக முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார். இந்த மூன்று மாதத்தில் அரசின் சார்பிலும், இயக்கத்தின் சார்பிலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நிவாரண உதவிகளை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் சார்பில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஏற்படுத்திய மாயையை முறியடித்து மக்கள் அதிமுக கொடுக்கின்ற நிவாரணப் பொருள்களை மனமார ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை வைத்து கொண்டு இருக்கிறார். பொருளாதார மேம்பாட்டுக்கு இணங்க பல்வேறு நிவாரணங்களை வழங்கியுள்ளனர். குறிப்பாக மத்திய அரசு கடன் நிலுவை தொகையை வசூலிக்கும் ஆறு மாதம் அவகாசம் கொடுத்து உள்ளனர். மூன்று மாதத்திற்குப்பிறகு தற்போது மின்கட்டணம் மாநில அரசு வசூல் செய்து வருகிறது. விவசாயத்துறையில் பல உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அரசால் முடிந்த அனைத்து திட்டங்களையும் மிகச்சிறப்பாக செய்து வருகிறோம்.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழக அவைத்தலைவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட மன்ற செயலாளர் ஓம்.கே.சந்திரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பூமிபாலன், சேது, ஆலடி, பரமசிவம், ஜெயச்சந்திரன், பூமிநாதன், குருவு, கருத்த கண்ணன், மாவட்ட கவுன்சிலர் லட்சுமிபதி ராஜன், தனிக்கொடி, முத்தையா, கோபால சாரி, கிருஷ்ணன், அழகர்சாமி, கருப்பு, மாரி, தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆஷிக், பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.