திருவள்ளூர்

ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கழக அரசு தான் தமிழகத்தை தொடர்ந்து வழி நடத்தும் சிறுணியம் பி.பலராமன் திட்டவட்டம்

திருவள்ளூர்

ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கழக அரசு தான் தமிழகத்தை தொடர்ந்து வழி நடத்தும் என்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பொன்னேரி தொகுதியில் உள்ள சோழவரம் ஒன்றியம் மாதவரம், ஆமூர் ஊராட்சிகளில் 3500 ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் தலா 5 கிலோ அரிசி, காய்கறி, மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பினை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராகேஷ் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு பணிகளை முழுவீச்சில் செயல்படுத்தி இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என தமிழக முதல்வரை மத்திய அரசு பாராட்டி வருகிறது. இதனைப் பொறுத்துக் கொள்ளாத திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை கூறி தமிழக அரசை விமர்சனம் செய்து வருகின்றனர்.

கொரோனா சமூக பரவல் பல மாவட்டங்களில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்களும் அரசுடன் இணைந்து சமூக விதிகளை பின்பற்ற வேண்டும். ஒருசில மண்டலங்களில் சில கட்டுப்பாடுகள் மூலம் தொற்றை விரைவில் முழு கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. வைரஸ் தொற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளைை எடுத்து வருகிறது.

குடிநீர் பிரச்சினையை முற்றிலும் தீர்க்க குடிமராமத்து பணிகள் மூலம் மாவட்டங்களில் உள்ள கண்மாய்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் தலைமையில் வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும், நிவாரண உதவிகளை திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள பொதுமக்கள் பெற்று பயனடைந்துள்ளனர் என்பது அவர்களுக்கே நன்கு தெரியும் தொடர்ந்து.

இதனை மறைத்து மக்களை திசை திருப்பினால் திமுகவுக்கு தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். முதலமைச்சரின் எண்ணற்ற பல திட்டங்களால் முழுவீச்சில் நடைபெறும் நிவாரண பணிகள் அனைத்து குடும்பங்களுக்கும் சென்றடைந்துள்ளன. ஆகையால் வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் கழகம் தான் மீண்டும் ஆட்சிக்கு வரும். ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கழக அரசு தான் தமிழகத்தை தொடர்ந்து வழி நடத்தும்.

இவ்வாறு சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கார்மேகம், மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராஜேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் பானு பிரசாத், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை, மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனம், ஒன்றிய கவுன்சிலர் விஷ்ணுபிரியா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர், தமிழ்ச்செல்வன் முன்னாள் கவுன்சிலர்கள் வாசு, சிவராஜ், அமிர்தலிங்கம், வழக்கறிஞர் பிரிவு இளையராஜா, மாரி, பொன்னேரி துர்கா பிரசாத், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ஸ்ரீதர், மாணவரணி சூர்யா, காமேஷ், கௌதம், இமான், விவேக், பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.