தற்போதைய செய்திகள்

கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் ஏற்பாட்டில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு 10 டன் அரிசி – அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்

சிவகங்கை

8 கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்களுக்கு 10 டன் அரிசியை கழக செய்தி தொடர்பாளரும், நமது அம்மா பத்திரிகை ஆசிரியருமான மருது அழகுராஜ் ஏற்பாட்டில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா சிறப்பு நிவாரணமாக கழக செய்தி தொடர்பாளரும், நமது அம்மா பத்திரிகை ஆசிரியருமான மருது அழகுராஜ் 30,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வருகிறார்.

கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பலவான்குடி, ஆத்தங்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட 8 கிராமங்களுக்கு 10 டன் அரிசியை 2 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ என ஒவ்வொரு குடும்பத்துக்கும் கழகம் சார்பாக கழக செய்தி தொடர்பாளரும், நமது அம்மா பத்திரிகை ஆசிரியருமான மருது அழகுராஜ் ஏற்பாட்டில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன், மாநில நிர்வாகி வெங்களூர் வீரப்பன், ஆவின் தலைவர் அசோகன், கல்லல் ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் சையது அபுதாஹிர், மாவட்ட பிரதிநிதி சிவா, இளைஞர் அணி இணைச் செயலாளர் நாகராஜ், பார்த்திபன் பிரபு என ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.