தற்போதைய செய்திகள்

காங்கேயம் ஒன்றியத்தில் அ.ம.மு.க.வினர் விலகல் – 300க்கும் மேற்பட்டோர் கழகத்தில் ஐக்கியம்

திருப்பூர்

காங்கேயம் ஒன்றியத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் விலகி காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

திருப்பூர் புறநகர் மாவட்டம் காங்கேயம் ஒன்றியம் நத்தக்காடையூர் ஊராட்சி பகுதிகளில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் பி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் 5 பேர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

புதியதாக கழகத்தில் இணைந்த 300க்கும் மேற்பட்டோருக்கு காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் சால்வை அணிவித்து பாராட்டி பேசினார்.

அதனைத்தொடர்ந்து கழகத்தில் இணைந்தவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றிய திமுகவினரை இனிமேலும் நம்ப மாட்டோம், தமிழக மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருவது அம்மாவின் அரசு. எனவே தான் எங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டோம். தாயுள்ளத்தோடு எங்களை கழகத்தில் இணைத்துக் கொண்ட முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இனி எப்பொழுதும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி தொடர பாடுபடுவோம் என உறுதி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் கே.ஜி.கே.கிஷோர்குமார், ஒன்றிய கழக அவைத்தலைவர் மைனர் பழனிசாமி, ஊராட்சி கழக செயலாளர் எஸ்.இளங்கோ, ஒன்றியக்குழு தலைவர் கற்பகம் ஜெகதீசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பி.கே.பி.சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராசு(எ) சண்முகசேகரன், சந்திரசேகர், பழனிசாமி, தங்கமுத்து, நடராஜ், இளங்கோ, மணி, பொன்னுசாமி, சண்முகம், வி.ஆர்.சுந்தரமூர்த்தி உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.