தற்போதைய செய்திகள்

ஆலங்காயம் ஒன்றிய கழக நிர்வாகி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி – அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் வழங்கினர்

வேலூர்

ஆலங்காயம் ஒன்றிய கழக நிர்வாகி குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதி உதவியை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் ஆகியோர் வழங்கினர்.

வேலூர் மேற்கு மாவட்டம் ஆலங்காயம் ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான மறைந்த கே.பி.மணி திருவுருவப்படம் திறப்பு விழா ஆலங்காயம் ஒன்றியம், வள்ளிப்பட்டு ஊராட்சி, குள்ளப்பனூர் கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஆலங்காயம் ஒன்றிய கழக செயலாளருமான கோவி.சம்பத்குமார் தலைமை தாங்கினார். வாணியம்பாடி நகர கழக செயலாளர் ஜி.சதாசிவம், ஆலங்காயம் பேரூராட்சி கழக செயலாளர் டி.பாண்டியன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சி.கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி, மாவட்ட கழக துணை செயலாளரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் நிலோபர்கபீல் ஆகியோர் கலந்து கொண்டு, கே.பி.மணி திருவுருவப்படத்தை திறந்து வைத்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.தொடர்ந்து கழகம் சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவியை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, டாக்டர் நிலோபர்கபீல் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், முன்னாள் பேரூராட்சி கழக தலைவர் மஞ்சுளா கந்தன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் ஜெயசக்தி, இரா.லட்சுமிகாந்தன், திருப்பத்தூர் ஒன்றிய கழக செயலாளர் சி.செல்வம், முன்னாள் சேர்மன் திருப்பதி, நகர கழக பொருளாளர் தன்ராஜ், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், கூட்டுறவு சங்க தலைவர்கள் திருப்பதி கவுண்டர், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியின் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.