கடலூர்

திடக்கழிவுகளை அகற்றும் பணிக்கு 13 வாகனங்கள் – கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ வழங்கினார்

கடலூர்

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 9 ஊராட்சிகளுக்கு கழிவுகளை அகற்றும் பணிகளை நவீனப்படுத்தும் விதமாக 13 பேட்டரியால் இயங்கும் வாகனங்களை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் வழங்கினார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 9 ஊராட்சிகளுக்கு கழிவுகளை அகற்றும் பணிகளை நவீனபடுத்தும் விதமாக பேட்டரியால் இயங்கும் வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அசோகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரெங்கம்மாள், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவஞானம் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கழிவுகளை அகற்றும் பணியினை நவீனப்படுத்திடும் விதமாக பள்ளிப்படை ஊராட்சிக்கு 3, சி.கொத்தங்குடி ஊராட்சிக்கு 2, அரியகோஷ்டி ஊராட்சிக்கு 2, மஞ்சகுழி, அத்தியாநல்லூர், சிலம்பிமங்கலம், பின்னத்தூர், பெரியப்பட்டு மற்றும் வில்லியநல்லூர் ஊராட்சிகளுக்கு தலா 1 என ரூ.32 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் 13 வாகனங்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வீராசாமி, அம்மா பேரவை சந்தர் ராமஜெயம், நிர்வாகிகள் புதுப்பேட்டை கண்ணன், சிவக்குமார், நாகராஜ், கிள்ளை தமிழரசன், சண்முகசுந்தரம், கொத்தட்டை ரெங்கசாமி, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் கிருஷ்ணகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி, மேற்பார்வையாளர்கள் செல்வம், சந்தியராஜ், ராஜா மற்றும் அதிகாரிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக் பாபு நன்றி கூறினார்.