விழுப்புரம்

உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – இரா.குமரகுரு எம்.எல்.ஏ வழங்கினார்

விழுப்புரம்

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை ஒன்றியம் சிக்காடு ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு வழங்கினார்.

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை ஒன்றியம் உள்ள சிக்காடு, கொளத்தூர், அதையூர், கூவாடு, தேன்குணம், குஞ்சரம் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், விழுப்புரம் தெற்கு கழக மாவட்ட செயலாளரும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான இரா.குமரகுரு தனது சொந்த செலவில் 12000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளான அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட தொகுப்பை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக செயலாளர் மணிராஜ், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் சாய்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் சுப்புராயன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவிந்தன், கூட்டுறவு சங்க தலைவர் பன்னீர்செல்வம், நகர துணை செயலாளர் கஜேந்திரன், கழக நிர்வாகிகள் சம்மந்தமூர்த்தி, செல்வம், சங்கர் கணேஷ், கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.