திருவள்ளூர்

4 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய தொகுப்பு – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ, எஸ்.ராகேஷ் ஆகியோர் வழங்கினர்

திருவள்ளூர்

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட சைனாவரம், மாலிவாக்கம் ஆகிய பஞ்சாயத்துகளில் உள்ள 4000 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய தொகுப்பினை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராகேஷ் ஆகியோர் வழங்கினர்.

கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க. திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும். பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தினந்தோறும் ஒவ்வொரு கிராமமாக சென்று ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் பொன்னேரி தொகுதியில் உள்ள சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட சைனாவரம், பஞ்சாயத்தில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய தொகுப்பினை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராகேஷ் ஆகியோர் வழங்கினர். அப்போது பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு ஒன்றன்பின் ஒன்றாக வந்து நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றனர்,

அதேபோல் மாலிவாக்கம் பஞ்சாயத்தில் உள்ள 2000 ஏழை குடும்பங்களுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராகேஷ் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ பொதுமக்களிடம் அவர் கூறுகையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் பொன்னேரி தொகுதியில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் முடிந்தவரை அரசு கூறும் விதிமுறைகளை தயவுகூர்ந்து பொதுமக்களாகிய நீங்கள் பின்பற்றினால் மட்டுமே கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். எங்கு சென்றாலும் முக கவசம் மற்றும் பாதுகாப்பாய் இருக்க கையுறைகள் அணிய வேண்டும்.

அதேபோல் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவுங்கள். எப்பொழுதும் எங்குமே நாம் பாதுகாப்போடு இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸை விரைவில் ஒழிக்க முடியும். எந்த ஒரு பேரிடர் காலத்திலும் பொதுமக்களாகிய உங்களை நம்முடைய அம்மாவின் அரசு எப்பொழுதும் பாதுகாக்கும். உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கார்மேகம், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் பானு பிரசாத், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை, மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனம், ஒன்றிய கவுன்சிலர் விஷ்ணுபிரியா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தமிழ்ச்செல்வன், முன்னாள் கவுன்சிலர்கள் வாசு, சிவராஜ், அமிர்தலிங்கம், வழக்கறிஞர் பிரிவு இளையராஜா, மாரி, பொன்னேரி துர்கபிரசாத், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ஸ்ரீதர், மாணவரணி சூர்யா, காமேஷ், கௌதம், இமான், விவேக், பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.