தற்போதைய செய்திகள்

பாலக்கோடு ஒன்றியத்தில் ரூ.3.57 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3 கோடியே 57 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடம் மற்றும் தார்சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் முதலமைச்சர் உத்தரவின் படி, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஸ். சி.பி.ஏ.ஆர் 2019-2020-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.48.12 லட்சம் மதிப்பீட்டில் பேவுஅள்ளி ஊராட்சி ஈச்சம்பள்ளம் ஓம்சக்திகோவில் சாலை முதல் கும்மிடி ஜோனை வரை தார்சாலை அமைக்கும் பணி, எஸ்எப்சி(பி.பி) 2019-2020 -ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் பேவுஅள்ளி ஊராட்சி சீரண்டபுரம் சாலை முதல் சக்கிலிநத்தம் சாலை (வழி சின்னநாயக்கனர் கொட்டாய்) வரை தார்சாலை அமைக்கும் பணி, எஸ்.சி.பி.ஏ.ஆர் 2019-2020-ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.44.27 லட்சம் மதிப்பீட்டில் எம்.செட்டிஅள்ளி ஊராட்சி எம்.செட்டிஅள்ளி கிராமம் முதல் ரெயில்வே சாலை வரை தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் ஆர்.சி.ஐ.டி.எஸ் 2019-2020-ம் ஆண்டு நிதி கீழ் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் எம்.செட்டிஅள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு 2 வகுப்பறையுடன் கூடிய கட்டிடம் கட்டுதல், டி.என்.ஆர்.ஆர்.ஐ.எஸ். 2019-2020-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் சி.டி.பெட்டம் ஊராட்சி பெரியதோரணபெட்டம் முதல் சாசிகுட்டை வரை சாலை அமைத்தல், டி.என்.ஆர்.ஆர்.ஐ.எஸ். 2019-2020-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் சி.டி.பெட்டம் ஊராட்சி ராசிகுட்டை முதல் சின்னகும்மனூர் வரை தார்சாலை அமைத்தல், 80 சதவீதம் சி.ஜி.எப் 80 சதவீதம் 2019-2020- ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் சி.டி.பெட்டம் ஊராட்சி சிக்கதோரனபெட்டம் முதல் காட்டுகொட்டாய் வரை தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட 7 பணிகள் ரூ.3 கோடியே 57 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் தார்சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி வகித்தமாவட்ட அறங்காவல் குழுத்தலைவர் கே.வி.அரங்கநாதன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் தொ.மு.நாகராஜன், பாலக்கோடு ஒன்றியக்குழு தலைவர் பாஞ்சாலை கோபால், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் சரவணன், சங்கர், வீரமணி, கோவிந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், கௌரி, உதவி பொறியாளர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.