தற்போதைய செய்திகள்

பனையூர் கிராம மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பனையூர் பகுதி மக்களுக்கு சிறப்பு நிவாரணமாக தலா 5 கிலோ அரிசியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் நலன் கருதி ஆரணி தொகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி நிவாரணம் வழங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முடிவு செய்து அந்த நிவாரண பணியை முள்ளண்டிரம் கிராமத்தில் துவக்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து துருகம், முள்ளிப்பட்டு பகுதி மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்நிலையிரல் நேற்று முன்தினம் ஆரணி ஒன்றியம் பனையூர், ஆரணி டவுன் பகுதி சத்யா நகர் பகுதியிலும், மேற்கு ஆரணி ஒன்றியப்பகுதியில் தேவிகாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி பைகளை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் க.சங்கர், மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், நகர செயலாளர் எ.அசோக்குமார், மாவட்ட துணைசெயலாளர் டி.கருணாகரன், மாவட்ட கவுன்சிலர்கள் அ.கோவிந்தராசன், ப.திருமால், மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.