தற்போதைய செய்திகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை கொண்டாடிய மாணவிகள்

சேலம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யபட்டதால் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து மாணவிகள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

தமிழகத்தில் கொரொனா நோய் தாக்குதல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பலமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  காலை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டுள்ளனர் என மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார். அதனால் மகிழ்ச்சியில் மாணவ மாணவிகள் ஆழ்ந்துள்ளனர் மேலும் தேர்வை ரத்து செய்த முதலமைச்சருக்கு அவர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்

இது குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ப்ரீத்தி கூறும்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை கொண்டாடுவதற்காக ஐஸ்கிரீம் சாப்பிட்டு மகிழ்ச்சியை கொண்டாடி வருவதாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஆத்தூர் பள்ளி மாணவி சியாமளா கூறும்போது தேர்வு பயத்தில் ஆழ்ந்திருந்தது தற்போது தேர்வு ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது தற்பொழுது மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக அந்த மாணவி தமிழக முதலமைச்சருக்கு தனது நன்றியினை தெரிவித்து கொண்டார்.